Friday, 29 March 2013

சி.எல்.எஃப் பல்புகள் பற்றிய தகவல்

C.F.L .பல்புகள் உடைந்தால்...! என்ன செய்வது?........யோசிக்க வேண்டாம்
கீழே படிக்க தொடருங்கள்.

சி. எஃப். எல். பல்புகள் கைத்தவறி விழுந்து உடைந்துவிட்டால் , உடனே அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று பிரிட்டிஷ் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது . ஏனென்றால் இந்த பல்புகளுக்குள் உள்ள மெர்க்குரி திரவம் , ஆர்சனிக் , துத்தநாகத்தைவிட அதிக விஷத்தன்மையுள்ளது . இந்த விஷத்தை நுகர்ந்தாலோ அல்லது சருமத்தில் பட்டாலோ , மைக்ரேன் தலைவலி , மூளை பாதிப்பு , உடல் அசைவுகள் , பாதிக்கப்பட்டு நிலை தடுமாறுதல் போன்றவை ஏற்படுமாம் . அலர்ஜி பிரச்னை உள்ளவர்களுக்கு சரும பாதிப்புகளும் ஏற்படுமாம் .

சி. எஃப். எல் .பல்புகள் உடைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் ?

* உடனே அந்த அறையிலிருந்து வெளியேறி விட வேண்டும் . அந்த நெடி மூக்கில் ஏறக்கூடாது . பதினைந்து நிமிடங்கள் ஆனபின் அப்புறப்படுத்தலாம் . நொருங்கிக் கிடக்கும் கண்ணாடித் துகள்கள் காலில் படாமல் பார்த்துக் கொள்ளவும் .

* வேக்வம் க்ளீனரால் சுத்தப்படுத்தக் கூடாது . வேக்வம் உறிஞ்சப்பட்டால் , அது உள்ளே ஒட்டிக்கொள்ளும் . அதைத் திரும்ப உபயோகிக்கும் போது மெர்க்குரித் துகள்கள் மற்ற அறைகளுக்கும் பரவி , மிக மோசமான உடல் உபாதைகளை ஏற்படுத்தும் .

* கைகளில் ரப்பர் கிளவுஸ் போட்டுக்கொண்டு சாதாரண துடைப்பத்தால் சுத்தப்படுத்தலாம் .

* உடைந்தத் துகள்கள் மற்றும் திரவத்தை ஒரு பிளாஸ்டி பையில் சேகரித்து , ' சீல் ' செய்யவும் . சாதாரண குப்பைத் தொட்டியில் போடாமல் , கார்ப்பரேஷன் ' ரீசைக்ளீங் பின்' னில் கொண்டு சேர்த்தால் , அவர்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தி விடுவார்கள் .

தேர்வில் வெற்றி பெற்று அரசாங்க உதவியை பெறுவது எப்படி?


மாணவர்களை சரியான நேரத்தில் சரியான புத்திமதிகள் சொன்னால் உடனே பதிந்து விடும். இப்பொழுது தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில் மதிப்பெண்கள் அதிகமாக எடுத்தால் உயர்கல்விக்கு அரசாங்கமே நிறைய உதவிகள் செய்ய காத்துக்கொண்டிருக்கிறது. அதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள சரியான தருணம் இது.

2010 +2 தேர்வில் 80% மதிப்பெண் எடுத்து இந்த ஆண்டு 2010- ல் பட்ட படிப்பு ( BA /B.Sc/ B.E/ B.Tech/ B.Com/ BBA/ B.Pharm/ B.Arch etc...) சேர்ந்த மாணவர்களுக்கு மாதம் ரூ 1,000 மத்திய அரசால் வழங்ப்படுகின்றது   ( முதுகலை ( Master Degree) படிக்கும் போது மாதம் ரூ. 2,000 வழங்கப்படும்).   2009 மற்றும் அதற்க்கு முன்னர் தேர்சி பெற்றவர்களுக்கு இந்த உதவி தொகை கிடைக்காது.  இது 2010- ல் 80 % மதிப்பெண் எடுத்தவர்களுக்கு மட்டுமே. இந்த உதவி தொகை. தமிழகத்தில் மொத்தம்  4883 மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ. 4,50,000- க்கு குறைவாக இருக்க வேண்டும்.

மாணவர்கள் இந்த இணையதளத்திற்கு http://www.tn.gov.in/dge/scholarship/login.php   சென்று தங்களுடைய + 2 தேர்வு பதிவு எண்ணை ( Registration Number) சமர்பிக்கவேண்டும் தங்களுடைய மதிப்பெண்ணை சரிபார்த்து 80% சதவீதத்திற்க்கு மேல் இருந்தால் விண்ணப்ப படிவத்தை டவுன்லோட் செய்யலாம். நவம்பர் 12- ஆம் தேதி வரைதான் விண்ணப்பத்தை டவுன்லோடு செய்ய முடியும்   . பூர்த்தி செய்து அனுப்ப கடைசி தேதி நவம்பர் 16.

உடன் சமர்பிக்க வேண்டிய சான்றிதழ்கள்

1. சாதி சான்றிதழ்
2. வருமான சான்றிதழ்
3. +2 மதிப்பெண் சான்றிதழ்

பூர்தி செய்யப்ப்பட்ட விண்ணப்பத்தை   அனுப்ப வேண்டிய முகவரி

இணை இயக்குனர் ( மேல் நிலை)
அரசு தேர்வுகள் இயக்ககம்
DPI. வளாகம் , கல்லூரி சாலை
சென்னை - 600006.

கிரியோன் கார்த்திக்கின் சாதனை

பார்வை இழந்த ஒருவர், யாரும் செய்யாத உலகச் சாதனையை செய்து விட்டு அந்தச் சாதனையைக்கூட வெளியே சொல்லாமல் இருக்கிறார். அப்படிப்பட்ட சாதனையாளர் தான் கிரியோன் கார்த்திக்.

தற்போது தியேட்டர்களில் ஒடிக்கொண்டிருக்கும் "கருட பார்வை' என்ற திகில் படத்தின் இசை அமைப்பாளர்தான் இந்த கிரியோன் கார்த்திக். ஒரு பாட்டை "கம்போஸ்' செய்யும் பார்வையற்ற கலைஞர்கள் உண்டு.,ஆனால் மவுனமாக திரையில் ஒடும் திரைப்படத்திற்கு "ரீரிக்கார்டிங்' எனும் உயிர் கொடுக்கும் வேலையை செய்ய அவர்களில் யாரும் இல்லை.

காரணம் நிமிடத்திற்கு நிமிடம் காட்சிகள் மாறிக்கொண்டே இருக்கும், மழை பெய்யும்,கார் ஒடும்,கதாநாயகன் வில்லனை புரட்டி எடுப்பார்,பறவைகள் சத்தமிடும்,வாகனங்கள் அலறும் இவை அனைத்தையும் கண்கொண்டு பார்த்து பிறகே, ரீரிக்கார்டிங் செய்ய முடியும்.

அதிலும் திகில் படம் என்றால் இசைதான் பிரதானம். ரசிகர்ளை நாற்காலியின் நுனியில் உட்கார வைப்பதும், பிடரியில் வியர்வையை சுரக்க வைப்பதும், மயிர்கால்களை நிற்கச் செய்வதும், சிலீர் என உடலுக்குள் சிலிர்ப்பை ஏற்படுத்துவதும், மனதிற்குள் அடுத்து என்ன,அடுத்து என்ன என்ற பட்டாம்பூச்சியை பறக்கவைப்பதும், படபடவென கண் இமைகளை துடிக்கவைப்பதும் திகில் பட இசையின் இலக்கணமாகும். இந்த இலக்கணத்தை வெகு கச்சிதமாக செய்திருக்கிறார் கார்த்திக்.

படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் இதை எப்படி செய்தேன் ,ஏன் செய்தேன் என்பதை அருகிலிருந்து அவர் விளக்கம் கொடுத்த போது படத்தின் இசையில் இன்னும் சுவராசியம் கூடியது. இதெல்லாம் எப்படி சாத்தியம் என்ற உங்களது கேள்விக்கு பதில் தருவதற்கு முன் கொஞ்சம் கார்த்திக்கின் வலி மிகுந்த ஆரம்பகால வாழ்க்கையை பார்த்துவிடுவோம்.

கார்த்திக்கின் தந்தை பொன்ராம் ஒரு ராணுவ வீரர். இந்தியா -பாக்கிஸ்தான் யுத்தத்தின் போது குண்டு பாய்ந்து கால் பாதிக்கப்பட்டவர். அதன் பிறகு கஸ்டம்ஸ் பிரிவில் சேர்ந்தார். நேர்மை மிகுந்த கஸ்டம்ஸ் அதிகாரியாக பணியாற்றிய இவரை எதிரிகள் நடுக்கடலில் சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவத்தால் நிலை குலைந்து போனவர் கார்த்திக்கின் தாயார் சாவித்திரி தான். வெளி உலகம் தெரியாமல் இருந்தவர் கணவரின் இழப்பீட்டு தொகையைக் கொண்டு பிள்ளைகளை படிக்கவைத்தார்.

மூன்று வயதான போது இடது கண்ணில் ஒரு சின்ன பிரச்னைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார் கார்த்திக். பயிற்சி டாக்டர்கள் செய்த தவறான ஆபரேஷனால் இடது கண் பார்வையை இழந்தார்.,பிறகு மூத்த டாக்டர்கள் பார்த்துவிட்டு வருத்தம் தெரிவித்தவர்கள், கூடுதலாக ஒரு அதிச்சி தகவலையும் தந்தார்கள். யாராவது கன்னத்திலோ, தலையிலோ அடித்தால் வலது கண்ணும் பாதிக்கப்படலாம் என்பதுதான் அந்த தகவல்.

இது நடந்துவிடக்கூடாது என்பதில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்தபோதும், விதி வலியது என்பது போல, அந்த கொடுமையும் ஆசிரியை ஒருவர் கோபங்கொண்டு தலையில் அடித்ததன் மூலம் நடந்து விட்டது.

அடித்த ஒரு மணி நேரத்தில் வலது கண் பார்வையும் போய்விட எதிரே இருந்தவை மட்டுமல்ல ,எதிர்காலமே இருண்டதைப் போல இவரது குடும்பத்தார் உணர்ந்தனர்.

இழந்த பார்வையை பெறுவதற்காக போராடியதில் இருந்த பணத்தையும் இழந்ததுதான் கண்ட பலனாக இருந்தது. வறுமையும்,வாழ்க்கையும் துரத்த சென்னை பார்வையற்றோர் பள்ளியில் சேர்ந்தார் கார்த்திக். இவர் தன் வேதனைக்கான வடிகாலாக இசையை தேர்ந்து எடுத்தார். எதிலும் வேகத்துடனும்,விவேகத்துடனும் செயல்படும் இவரது திறமையால் சிறந்த பியானோ கலைஞரானார்., 1800 பேர் கலந்து கொண்ட இசைப்போட்டியில் முதலாவதாக வந்தார்.

இசை,இசை என்று எந்த நேரமும் இசைக்காக அலைந்தார், நல்ல பாடல்களை பல ராகங்களில் இசைப்பதற்காக,தேடித்தேடி நிறைய கற்றார், ரத்ததானம் செய்தும், இசைக்கருவிகளை அடகு வைத்தும் கூட இசை பயின்றிருக்கிறார். சாப்பாடு இல்லாமல் கூட இருக்கமுடியும் ஆனால் இசை இல்லாமல் இவரால் இருக்கமுடியாது. அதன் பிறகு மதுரையில் நல்லதொரு மியூசிக் ஸ்டூடியோவை அமைத்து நிறைய இசை ஆல்பங்கள் தயாரித்து வருகிறார். சென்னையில் இவருக்கு பெரிதும் உதவுபவர் உறவினர் தில்லைநாயகன்.

இந்த நிலையில்தான் சினிமாவில் ரீரிக்கார்டிங் செய்வது என்பது நம்மால் முடியாது என்று பார்வையற்ற நண்பர் ஒருவர் கூற, ஏன் முடியாது நம்மால் முடியும், அதுவும் நானே இதை நிகழ்த்திக்காட்டுவேன் என்று சபதமும் செய்தார்.

சபதத்தின்படி ,முழுக்க மாற்றுத்திறனாளிகளால், மாற்றுத்திறனாளிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட "மா' படத்திற்கு இசை அமைத்தார், பலராலும் பாராட்டப்பெற்றது.

என்னைப்பற்றி கேள்விப்பட்ட "கருட பார்வை' இயக்குனர் விவேகானந்தன்,"" நான் ஒரு திகில் படம் எடுக்கிறேன் இதற்கு இசை அமைக்கமுடியுமா?'' என்று கேட்டார்,அவருக்கு சில "நோட்ஸ்' போட்டுக் காண்பித்தேன்,நம்பிக்கையுடன் என்னை இசைஅமைப்பாளராக்கினார்.

சுமார் 48 நாட்கள் இரவு பகலாக உட்கார்ந்து படத்திற்கு ரீரிக்கார்டிங் செய்தேன். நான் ஒரு பார்வையுள்ள உதவியாளரை மட்டும் வைத்துக்கொண்டேன். நிறைய சங்கேத வார்த்தைகள் வைத்துக்கொண்டு ,படத்தோடு எனது ரீரிக்கார்டிங் இசையை கலவை செய்தேன். இயக்குனர் பார்த்துவிட்டு பாராட்டினார். இப்போது வெகுஜனங்கள் திரையில் பார்த்துவிட்டு பாராட்டுகிறார்கள்.

சினிமா மூலம் என்னுடைய இசை இன்னும் நிறைய பேரை சென்றடைய வேண்டும், சென்றடைய வாழ்த்துங்கள், வளர்கிறேன் என்று கூறி விடைபெற்ற கார்த்திக்கின் தொடர்பு எண்: 9976916847.

நன்றி : தினமலர்.

மலிவு விலை உணவகங்கள்

சென்னை மாநகராட்சியில் மேலும் 127 மலிவு விலை உணவகங்களை திறந்து வைக்கப்பட உள்ளன. சென்னை மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் மலிவு விலை உணவகங்கள் திறக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்நார். இதன் அடிப்படையில் 73 வார்டுகளில் மலிவு விலை உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த உணவகங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், எஞ்சியுள்ள 127 வார்டுகளிலும் மலிவு விலை உணவகங்களை திறக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்கான பணிகள் பெருமளவில் முடிந்து விட்டது. இந்த உணவகங்கள் வரும் ஏப்ரல் 2ம் தேதி திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உணவகங்களை முதல்வர் ஜெயலலிதா வீடியோ கான்பரன்சிங் முறையில் திறந்து வைக்க உள்ளார்.

மகிழ்ச்சியாக வேலை செய்யுங்கள்....


செய்யக்கூடிய வேலையை சந்தோஷமாக உணர்ந்தால் மாத்திரமே உங்களால் அதை

முழுமையாக செய்து முடிக்க முடியும். கட்டாயத்திற்காக வேலை செய்வதாக

நினைத்து, விருப்பம் இல்லாமல் அதை செய்தீர்கள் என்றால், ரத்தக்கொதிப்பும்,

அல்சரும் மற்ற மனநோய்களும் கூப்பிடாமலேயே வந்து உங்களுக்குள்

உட்கார்ந்துக்கொள்ளும். செய்வதை 100 சதவீத ஈடுபாட்டுடன் செய்தால், உங்கள்

உள்ளுணர்வு உங்களை சரியான பாதையில் தானாக அழைத்துச் செல்லும்.

வெற்றிக்கான மந்திரச் சொல்....

நீங்கள் செய்ய விரும்புகிற காரியங்களில் மற்றவர்களின் ஒத்துழைப்பு வேண்டும்

என்று நீங்கள் விரும்பினால், அவர்களுக்கு உங்களுடைய ஒத்துழைப்பை முதலில்

கொடுங்கள். எந்த தொல்லை, எந்தப் பிரச்சனை ஆனாலும் அதைச்

சமாளிப்பதற்கான வழி, முதலில் நீங்கள் அதற்குத் தயாராக இருப்பதுதான். நம்மை

மற்றவர்கள் ஏற்க வேண்டும் என்று கருதினால், பிறர் ஏற்கத்தக்க வகையில் நாம்

நம்மை முதலில் ஆக்கிக்கொள்ள வேண்டும். சிக்கல் நிறைந்த பிரச்சனைகளைத்

தீர்க்க வேண்டுமெனில், அவற்றைப் பகுதிகளாக பிரித்து முதலில் அவற்றை

எளிமையாக்கிக் கொள்ள வேண்டும். நாம் எதிலும் நீடித்திருக்க விரும்பினால்,

நடைமுறையில் உள்ள சுற்றுச்சூழலுக்கு ஏற்ப முதலில் நம்மை சரிசெய்து கொள்ள

வேண்டும். மற்றவர்களை வெற்றி கொள்ள முதலில் அவர்களைப் பாராட்டுங்கள்,

ரசியுங்கள், முக்கியமானவர்களாக கருதுங்கள். அவர்கள் தேவைப்படுகிறவர்கள்

என்ற உணர்வை ஏற்படுத்துங்கள். முதலில் தோல்விகளில் இருந்து பாடம்  கற்றுக்

கொள்ளவும். தோல்வியே வெற்றிப்படிகள் தோல்விகள் என்பது ஒரு பாடம், அவை

இழிவு அல்ல. வெற்றி பெறுவதற்கெல்லாம் முதல் படியாக நீங்கள் முதலில் நம்பிக்கை

கொள்ள வேண்டும். பிறகு கடின உழைப்பும் மேற்கொள்ள வேண்டும். அதுவும்

தொடர்ந்து இருக்க வேண்டும். உங்களுடைய ஆழ்மன விருப்பங்களை உள்

மனத்தின் அளவற்ற சக்தி மூலமாக நடைமுறைக்குக் கொண்டு வர நிங்கள்

விரும்பினால் முதலில் அதை இரண்டு வினாடி லட்சியக் கட்டளைகளாக உள் மனதில்

பதிய வைத்து விடுங்கள். ஒவ்வொரு நாளும் பல முறைகள் அதை ஜெயிக்க

வேண்டும். முதலில் எது அச்சத்தை எற்படுத்துகிறதோ அதை வலுக்கட்டாயமாகச்

செய்ய வேண்டும். மற்றவர்களிடம் உள்ள வல்லமையைப் பெற அல்லது பயன்

படுத்திக்கொள்ள முதலில் அவர்களுடைய உள் மனத்தின் விருப்பங்களை நிறைவு

செய்யுங்கள்.  அல்லது உதவி செய்யுங்கள். நீங்கள் வெற்றிப்றெ விரும்பினால்,

முதலில் வெற்றி  பெற்றவரைப் போன்று சிந்தித்து உணர்ந்து செயல்படுங்கள்.

மற்றவர்கள் பெறவிரும்பினால் முதலில் உங்கள் நல்லெண்ணத்தை

மற்றவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். மற்ற நண்பர்களைக் கவர்ந்திட நீங்கள்

விரும்பினால், உங்கள் நட்பை முதலில் மற்றவர்களுக்கு வழங்க வேண்டும் உங்களை

பிறர் நேசிக்க வேண்டும் என்றால் முதலில் மற்றவர்களை நீங்கள் நேசிக்க வேண்டும்

பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க


பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய மக்களில் ஒரு பகுதியினர்

தயாராகிவிட்டனர். கொலை, கொள்ளை, ஏமாற்றுதல் ஆகியவற்றின் பெயரால்

அவர்கள் தங்களை உயர்த்திக் கொள்ள நினைக்கின்றனர். பணம் இருந்தால் எல்லாம்

நடந்துவிடும் என்று நினைக்கின்றார்கள். பணக்காரர்களின் வாழ்க்கையைப் பார்த்து,

அதில் மயங்கி, தங்களையும் பணக்காரர்களாக்கிக் கொள்ள துடிக்கிறார்கள்.
படிப்பவர்களும் கூட சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ளனர்.

அப்படி சம்பாதிக்கும் பணத்தில் மார்க்க விதிகளுக்க மாறாக, குடி, விபச்சாரம்

போன்ற தடுக்கப்பட்ட வழிகளில் செல்கிறார்கள். காதல் என்ற போதையில் சிக்கி,

தங்களை தாங்களே சீரழித்துக் கொள்கிறார்கள். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில்

அதிக கவனம் செலுத்துகிறார்கள். கம்ப்யூட்டர் கல்வியை சாட்டிங் என்ற பெயரில்

சீரழிவு சாதனமாக மாற்றிக் கொள்கிறார்கள். இறுதியில், பல நோய்களுக்க

ஆளானபிறகு, இறைவா என்னை சோதித்து விட்டாயே என்று கதறுகிறார்கள்.

பணத்தால் தான் குழப்பங்கள் ஏற்படுகின்றன என்பதும், மனிதர்கள் தங்களைத்

தாங்களே அழித்துக் கொண்டு, துன்பம் வரும்போது, இறைவன் மீது பழி

போடுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளன. பணத்தின்மீதான பாசத்தைக்

குறைத்துக்கொண்டால், பல பிரச்சனைகளில் இருந்து தப்பிவிடலாம். பணம்

வாழ்க்கைக்குத் தேவைதான். வாழ்க்கையே பணமயமாக இருக்க வேண்டாமே.

Thursday, 28 March 2013

ஸ்வீட் எடுத்துக்கோங்க

வணக்கம். ஸ்வீட் எடுத்துக்கோங்க. புதிய பிளாக்கர் ஆரம்பித்திருக்கிறேன். இலவசமாக  ஒரு சைட் இருக்கு என்றால் அது பிளாக்கர், வேர்ட் பிரஸ் மட்டுமே. அனைவரும் உபயோகப்படுத்தும் வகையில் பக்கங்களை வடிவமைத்து இருக்கிறார்கள்.